இந்தியா
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு முடிந்து டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி
- ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
- இந்த மாநாட்டின் இடையே ரஷியா, துருக்கி அதிபர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.
புதுடெல்லி:
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று மாலை தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுச் சென்றார்.
இதில், இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டின்போது மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் எர்டோகன் உள்பட பலரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை முடித்துக் கொண்டு உஸ்பெகிஸ்தான் சமர்கண்ட் நகரில் இருந்து நேற்று இரவு தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடி, இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தார்.