இந்தியா
null

ரூ.1000 கோடி வசூல்: நடிகர் கோவிந்தாவிடம் போலீசார் விசாரணை

Published On 2023-09-15 11:29 GMT   |   Update On 2023-09-15 11:30 GMT
  • ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி 2 லட்சம் பேரிடம் ரூ.1000 கோடி மோசடி செய்துள்ளனர்.
  • கோவிந்தாவுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருக்குமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலிவுட் திரை உலகில் புகழ் பெற்ற நடிகராக விளங்கியவர் கோவிந்தா.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் நாடு முழுவதும் அதிக வட்டி மற்றும் போனஸ் தருவதாக கூறி பொது மக்களிடம் கோடிக்கணக்கில் வசூலித்துள்ளது.

இந்த திட்டங்களை நடிகர்களை வைத்து விளம்பரப்படுத்தி உள்ளது. இதில் பாலிவுட் நடிகர் கோவிந்தா இந்த நிறுவனம் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒடிசாவில் மட்டும் 10 ஆயிரம் பேரிடம் ரூ.30 கோடியை வசூலித்துள்ளனர். இது தவிர மகாராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, டெல்லி உள்பட பல மாநிலங்களில் வசூல் வேட்டையை கோடிக்கணக்கில் நடத்தியுள்ளது.

இது குறித்து ஒடிசா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளை கைது செய்துள்ளனர்.

முதலீட்டாளர்களிடம் கூடுதல் முதலீட்டாளர்களை அழைத்து வந்தால் அதற்கு வட்டி மற்றும் போனஸ் அதிகமாக கிடைக்கும் என்று ஆசை காட்டி உள்ளனர். ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி 2 லட்சம் பேரிடம் ரூ.1000 கோடி மோசடி செய்துள்ளனர்.

இந்நிலையில் கோவாவில் கடந்த ஜூலை மாதம் நடந்த இந்த நிறுவனத்தின் விழாவில் நடிகர் கோவிந்தா நிறுவனத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

எனவே கோவிந்தாவுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருக்குமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஒடிசா பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி பங்கஜ் கூறுகையில், "இதுவரை கோவிந்தாவை நாங்கள் சந்தேகப்படவில்லை. அவரிடம் விசாரணை நடத்திய பிறகுதான் அவருக்கு எந்த அளவுக்கு பங்கு உள்ளது என தெரியும். அவரை இந்த வழக்கில் சாட்சியாக மட்டும் சேர்த்துக் கொள்வோம். அவரிடம் விசாரணை செய்ய தனிப்படை போலீசார் மும்பை செல்ல உள்ளனர்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News