இந்தியா
குஜராத் படகு விபத்தில் 18 பேர் மீது வழக்கு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
- குஜராத்தில் உள்ள ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் 2 ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் என 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் வதோதரா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் என மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வதோதரா படகு விபத்து தொடர்பாக 18 பேர் மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.