இந்தியா

2 நாள் அரசு முறை பயணமாக பூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி

Published On 2024-03-22 03:03 GMT   |   Update On 2024-03-22 03:12 GMT
  • மோசமான வானிலை காரணமாக பிரதமரின் பூட்டான் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
  • பிரதமர் மோடி ஷெரிங் டோப்கேயுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிப்பு.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21ம் தேதி அன்று பூடானுக்கு 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்வார் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் அவரது முன்னோடி ஜிக்மே சிங்யே வாங்சுக் ஆகியோரை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பிரதமர் மோடி ஷெரிங் டோப்கேயுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மோசமான வானிலை காரணமாக பிரதமரின் பூட்டான் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று காலை பூடான் புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு பூடானில் உள்ள பரோ சர்வதேச விமான நிலையத்தில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "" பூடானுக்கு சென்றுக் கொண்டிருக்கிறேன். இந்தியா-பூடான் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறேன். மாட்சிமை பொருந்திய பூடான் அரசர், நான்காவது ட்ருக் கியால்போ மற்றும் பிரதமர் ஷேரிங் டோப்கே ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News