இந்தியா

ஒருவேளை வயநாடு வாக்காளர்களை மகிழ்விக்கும் முயற்சியாக இருக்கலாம்: ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக பதில்

Published On 2024-07-02 10:53 GMT   |   Update On 2024-07-02 10:53 GMT
  • மக்களவையில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக மீது ராகுல் காந்தி பயங்கரமாக குற்றம்சாட்டினார்.
  • எந்த வகையிலம் அவர்கள் இந்துக்கள் அல்ல எனக் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி ஆர்எஸ்ஸ், பாஜக மற்றும் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார்.

சிவபெருமான் படத்தை காட்டி இந்துக்கள் தொடர்பாக பேசினார். ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் மோடி எந்த வகையிலும் இந்துக்கள் அல்ல. இவர்கள் இந்துக்களை பிரதிநிதிப்படுத்துபவர்கள் அல்ல என கடுமையாக பேசினார். இதற்கு பிரதமர் மோடி, அமித் ஷா கடுயைமாக ஆட்சேபனை தெரிவித்தனர். இந்துக்களை அவமதித்ததாக பாஜக எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் வயநாடு வாக்காளர்களை மகிழ்விப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் என மக்களவை எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக மனோஜ் திவாரி கூறியதாவது:-

மக்களவையில் கண்ணியமற்ற வகையில் பேசியதற்காகவும், இந்துக்களை வன்முறையாளர்கள் என குறிப்பிட்டதற்கும் ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

வயநாடு தொகுதியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ளார். பிரியங்கா காந்தி அங்கு இடைதேர்தலில் போட்டியிடுகிறார். இதனால் வயநாடு மக்களை மகிழ்விப்பதற்காக இந்துக்களை அவதூறு செய்துள்ளார்.

இவ்வாறு மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

வயநாடு தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News