ஆட்சியரை அடித்து துரத்திய கிராம மக்கள் - பரபரப்பு வீடியோ
- அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
- மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டார்.
தெலங்கானா மாநிலத்தின் விகாராபாத் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருந்து நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்க அரசு அதிகாரிகள் லாகர்சாலா என்ற கிராமத்திற்கு சென்றனர்.
கிராமத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பிரதீக் ஜெயினுக்கு எதிராக கோஷம் எழுப்பிய கிராம மக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு நிலம் கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
கிராம மக்களின் எதிர்ப்பு, போராட்டம் காரணமாக அந்த பகுதியில் அசாதாரண சூழல் நிலவியது. இதை உணர்ந்து மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானார். எனினும், கிராம மக்கள் அவரை சுற்றி நின்று வாக்குவாதம் செய்தனர். ஒருவழியாக வாகனத்தில் ஏறிக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டார்.
மாவட்ட ஆட்சியரை துரத்திய கிராம மக்கள் அவரது வாகனத்தை கற்களால் தாக்கினர். இதில் மாவட்ட ஆட்சியரின் வாகன கண்ணாடி சேதமடைந்தது.