இந்தியா
பலியான விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: பஞ்சாப் முதல்-மந்திரி அறிவிப்பு
- அரியானா போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டு போராட்டக்காரர்களை கலைத்த போது பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி பலியானார்.
- விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் பஞ்சாப் முதல்-மந்திரி தெரிவித்து உள்ளார்.
டெல்லியை நோக்கி போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப் விவசாயிகள் அந்த மாநில எல்லையான கனவுரி நகரில் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கிய போது அரியானா போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டு போராட்டக்காரர்களை கலைத்தனர். அப்போது பஞ்சாப்பை சேர்ந்த 21 வயது விவசாயி சுப்கரன் சிங் பலியானார். இதையொட்டி அரியானா போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் அறிவித்துள்ளார். மேலும் விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.