இந்தியா

உத்தரபிரதேசத்தில் வேலையின்மையால் இளைஞர்கள் திண்டாட்டம்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Published On 2024-02-18 08:33 GMT   |   Update On 2024-02-18 08:33 GMT
  • முதலில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியே வருவது ஒரு கனவாக இருக்கிறது.
  • இரட்டை என்ஜின் அரசு என்பது வேலையில்லாதவர்களுக்கு இரட்டை அடி.

புதுடெல்லி:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

உத்தரபிரதேசத்தில் மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் குறைந்த பட்சத் தகுதியுள்ள பதவிகளுக்குக்கூட வரிசையில் நிற்கின்றனர்.

முதலில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியே வருவது ஒரு கனவாக இருக்கிறது.

ஆட்சேர்ப்பு முடிந்தாலும் கூட கேள்விதாள் கசிந்து விடுகிறது. தேர்வுகள் நடந்தாலும் கூட அதன் முடிவு தெரியாது. நீண்ட காத்திருப்புக்கு பிறகு முடிவு வந்தாலும் பணியில் சேர்வதுதை உறுதி செய்வதற்காக அடிக்கடி கோர்ட்டுக்கு செல்ல வேண்டும்.

ராணுவத்தில் இருந்து ரயில்வே மற்றும் கல்வியில் இருந்து காவல்துறை வரை ஆட்சேர்ப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் வயது முதிர்ந்தவர்களாக மாறியுள்ளனர். இந்த விரக்தியின் பிரமைக்குள் சிக்கிய மாணவன் மன உளைச்சலுக்கு ஆளாகி உடைந்து போகிறார். இவையனைத்தும் மன உளைச்சலுக்கு ஆளாகி, அவர் தனது கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் இறங்கும் போது, காவல்துறையினரிடம் இருந்து தடியடிகளைப் பெறுகிறார். ஒரு மாணவனுக்கு, வேலை என்பது வெறும் வருமான ஆதாரமாக இல்லாமல், அவனது குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றும் கனவாகவும் இருக்கிறது, இந்தக் கனவு தகர்க்கப்படுவதால், ஒட்டுமொத்த குடும்பத்தின் நம்பிக்கையும் சிதறடிக்கப்படுகிறது.இரட்டை என்ஜின் அரசு என்பது வேலையில்லா தவர்களுக்கு இரட்டை அடி.

காங்கிரசின் கொள்கைகள் இளைஞர்களின் கனவுகளுக்கு நீதி வழங்கும். அவர்களின் தவத்தை வீண் போக விடமாட்டோம் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News