இந்தியா

வருமான வரி விவகாரம்.. ஆட்சி மாறினா சம்பவம் உறுதி - ராகுல் காந்தி

Published On 2024-03-29 14:52 GMT   |   Update On 2024-03-29 14:52 GMT
  • காங்கிரஸ் கட்சி இதனை "வரி தீவிரவாதம்" என்று குறிப்பிட்டது.
  • தைரியம் வராத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜனநாயகத்தை அழிக்க நினைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு 1800 கோடி ரூபாய் வருமான வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து, ராகுல் காந்தி இவ்வாறு கருத்து தெரிவித்து இருக்கிறார்.

வருமான வரி நோட்டீஸ் தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி இதனை "வரி தீவிரவாதம்" என்று குறிப்பிட்டது. வருமான வரித்துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீசில் காங்கிரஸ் கட்சி 2017-18 மற்றும் 2020-21 ஆண்டுகளில் செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் கட்ட தவறியதற்கான வட்டி உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பான எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், "ஆட்சி மாறும்போது ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இதோடு, மீண்டும் ஒருமுறை இதுபோன்ற செயல்களை செய்ய தைரியம் வராத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது எனது உத்தரவாதம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News