இந்தியா

ராகுல் காந்தி, அசோக் கெலாட்

சீனா போருக்கு தயாராகிறது... இந்திய அரசு தூங்குகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2022-12-16 17:13 GMT   |   Update On 2022-12-16 17:13 GMT
  • சீனாவின் அச்சுறுத்தல் தெளிவாக உள்ளது, அதை நமது அரசு புறக்கணித்து மறைத்து வருகிறது.
  • வெளியுறவுத்துறை அமைச்சர், சீனா தொடர்பான தனது அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும்

ஜெய்ப்பூர்:

இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ராஜஸ்தானின் தௌசாவில் பேசியதாவது:-

சீனா போருக்குத் தயாராகிறது, ஊடுருவலுக்கு அல்ல. அவர்கள் போருக்குத் தயாராகிறார்கள் என்பதை நமது அரசு ஏற்கவில்லை. இந்திய அரசாங்கம் நிகழ்வுகளில் செயல்படுகிறது, கொள்கையில் அல்ல. நமது நிலத்தை சீனா கைப்பற்றியுள்ளது. அவர்கள் வீரர்கள் நமது வீரர்களை அடிக்கிறார்கள். சீனாவின் அச்சுறுத்தல் தெளிவாக உள்ளது. ஆனால் அதை நமது அரசு புறக்கணித்து மறைத்து வருகிறது.

லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் தாக்குதலுக்கு சீனா தயாராகி வருகிறது. இந்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அறிக்கைகள், அவர் சீனா தொடர்பான தனது அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

ராகுல் காந்தியுடன் மாநில முதல்வர் அசோக் கெலாட் உடனிருந்தார். 

Tags:    

Similar News