அரியானாவில் ராகுல் காந்தி தீவிர பிரசாரம்
- அரியானா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 5-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
- அரியானாவில் 89 தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
சண்டிகர்:
90 தொகுதிகளை கொண்ட அரியானா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 5-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
பா.ஜனதா 3-வது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்துடன் உள்ளது. பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இரு கட்சிகள் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. இதே போல் ஜே.பி.பி. இந்திய தேசிய லோக்தளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் போட்டியில் உள்ளன.
அரியானாவில் ராகுல் காந்தி இன்று பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். அவர் இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார்.
டெல்லியில் இருந்து மதியம் 12.10 மணிக்கு ராகுல்காந்தி ஹெலிகாப்டர் மூலம் அரியானா புறப்பட்டார். கர்னாலில் உள்ள அசந்த் நகருக்கு அவர் சென்றடைகிறார். பிற்பகலில் அசந்த் சட்டசபையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஹிசார் பகுதியில உள்ள பர்வாலாவுக்கு செல்கிறார் மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார். மாலை அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் டெல்லிக்கு திரும்புகிறார். அரியானாவில் 89 தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. எஞ்சிய 1 இடத்தில் உள்ள கூட்டணியில் மார்ச்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு களத்தில் நிற்கிறது.