இந்தியா

ராகுல்காந்தி 4-ந்தேதிக்கு பிறகு தியானத்துக்கு சென்றுவிடுவார்-காங்கிரஸ் முன்னாள் தலைவர் தாக்கு

Published On 2024-06-02 07:06 GMT   |   Update On 2024-06-02 07:06 GMT
  • நேற்று வெளியான கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.
  • மோடியின் கைகளில் நாடு பலமாக இருப்பதாக நாட்டு மக்கள் உணர்கிறார்கள்.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் நேற்று வெளியான கருத்து கணிப்புகளில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை நாளான 4-ந்தேதிக்கு பிறகு ராகுல்காந்தி தியானத்துக்கு சென்றுவிடுவார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

'ஜூன் 4-ந்தேதி மாலை, இளவரசரும்(ராகுல் காந்தி) தியானத்திற்குச் செல்வார்.குகையைத் தேடும் பணி நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, பிரதமர் மோடி தேசிய ஒற்றுமையின் உச்சம். காஷ்மீரில் இருந்து 370-வது சட்டப்பிரிவு நீக்கம், ராமர் கோவில் கட்டியது. கல்கி தாமுக்கு அடிக்கல் நாட்டுதல், முத்தலாக் நீக்கம். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல். முழு உலகிலும் இந்தியாவின் கவுரவத்தை நிலைநாட்டியது உள்ளிட்டவை யெல்லாம் சாதாரண சம்பவங்கள் இல்லை.

இதனால்தான் பிரதமர் மோடி மீது இறைவனின் மகத்தான கருணை இருப்பதாக நான் எப்போதும் கூறுகிறேன். தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தவுடன், அசுர சக்திகளை அழிக்க வேண்டும் என்பதற்காக ஆன்மிக பலம் பெற கன்னியாகுமரிக்கு தியானம் செய்யச் சென்றார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த விவகாரத்தில் கூட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதை கைவிடவில்லை.

அதிகாரம் வருவதும் போவதும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரம் இருக்கும் இடத்தில்தான் இருக்கிறது. மக்கள் தங்கள் கையில் அதிகாரத்தை உணர்கிறார்கள். மோடியின் கைகளில் நாடு பலமாக இருப்பதாக நாட்டு மக்கள் உணர்கிறார்கள் என்றார்.

Tags:    

Similar News