இந்தியா

பயங்கரவாத தாக்குதல் வேதனை அளிக்கிறது.. எதிர்ப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - ராஜ்நாத் சிங்

Published On 2024-07-09 03:13 GMT   |   Update On 2024-07-09 03:13 GMT
  • பயங்கரவாத தாக்குதலில் நமது வீரம் மிக்க இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேரை இழந்ததற்காக மிகவும் வேதனைப்படுகிறேன்.
  • எங்கள் வீரர்கள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை ஏற்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். 6 பேர் காயமுற்றனர். காயமுற்ற வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தளத்தில்,

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் பத்னோட்டாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் நமது வீரம் மிக்க இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேரை இழந்ததற்காக மிகவும் வேதனைப்படுகிறேன்.

அவரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த கடினமான நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. மேலும் எங்கள் வீரர்கள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை ஏற்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்.

இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News