'ராமர் கோவில் அரசியல் இந்தியா கூட்டணியால் முறியடிக்கப்பட்டது'.. ராகுல் பேச்சால் கொதிக்கும் பா.ஜ.க
- அயோத்தி தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த சமாஜ்வாதி வேட்பாளர் வெற்றி பெற்றார்
- ராகுலின் இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குஜராத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் நேற்று அங்கு நடந்த கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'அரசியல் ஆதாயத்துக்காக பாஜக முன்னெடுத்த ராமர் கோவில் இயக்கம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியால் முறியடிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே குஜராத்திலும் மோடியை முறியடிப்போம்' என்று தெரிவித்தார்.
கடந்த நூற்றாண்டின் இறுதியில் பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ணா அத்வானி உள்ளிட்டோர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரில் முன்னெடுத்த ராமர் கோவில் இயக்கம், கலவரங்களின் மூலம் பாபர் மசூதியை இடிக்கப்படும் அளவுக்கு சென்றது.
அன்று முதல் புகைந்து கொண்டிருந்த இந்த ராமர் கோவில் இயக்கத்தில் முக்கிய கட்டமாக கடந்த 2014 ஆம் ஆனது மக்களவைத் தேர்தலில் பாபர் மசூதி இருந்த இடத்தில ராமர் கோவில் காட்டுவோம் என்று வாக்குறுதியுடன் வெற்றி பெற்று அமைந்த மோடி தலைமையிலான பாஜக அரசால் மீண்டும் தீவிரம் பெறத் தொடங்கியது.
அதன்விளைவாக 1800 கோடி செலவில் மத்திய பாஜக அரசால் ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாஜக ராமர் கோவிலை திறந்தது தேர்தல் ஆதாயத்துக்கான நகர்வாக எதிர்கட்சிகலால் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அயோத்தி தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த சமாஜ்வாதி வேட்பாளர் வெற்றி பெற்றார்.மேலும் பாஜகவின் கோட்டையாக விளங்கிய அம்மாநிலத்தில் இந்தியா கூட்டணி பெருமபான்மை வெற்றியை பெற்றது.
இந்த பின்னணியிலேயே ராமர் கோவில் இயக்கம் இந்தியா கூட்டணியால் முறியடிக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராகுலின் இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.