இந்தியா

கேரளாவில் ஓணம் பண்டிகையின்போது சிறுவனை பீர் குடிக்க வைத்த உறவினர் கைது

Published On 2022-09-22 05:41 GMT   |   Update On 2022-09-22 05:41 GMT
  • நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்த மனு என்பவர் தான் சிறுவனை கட்டாயப்படுத்தி பீர் குடிக்க வைத்தவர் என்பது தெரியவந்தது.
  • சிறுவன், மனுவின் சகோதரர் மகன் என்பதும், அவருக்கு 9 வயதே ஆவதும் தெரியவந்தது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் உற்சாகமாக கொண்டாடப்படும் ஓணப்பண்டிகையின்போது சிறுவன் ஒருவனுக்கு வாலிபர் ஒருவர் பீர் கொடுக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது.

இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள், இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் குழந்தைகள் நல அமைப்பினருக்கும் புகார்கள் சென்றது. அதன் அடிப்படையில் குழந்தைகள் நல அமைப்பினர் விசாரணை நடத்தினர். இதில் நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்த மனு என்பவர் தான் சிறுவனை கட்டாயப்படுத்தி பீர் குடிக்க வைத்தவர் என்பது தெரியவந்தது.

அந்த சிறுவன், மனுவின் சகோதரர் மகன் என்பதும், அவருக்கு 9 வயதே ஆவதும் தெரியவந்தது. இதையடுத்து மனு மீது குழந்தைகள் நல அமைப்பினர் நெய்யாற்றின் கரை போலீசில் புகார் செய்தனர். அவர்கள் மனு மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மனுவை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News