இந்தியா

கோப்புப்படம்

ஐபிஓ-க்கு ரெடியாகும் ரிலையன்ஸ் ஜியோ - வெளியான முக்கிய தகவல்

Published On 2024-07-12 05:11 GMT   |   Update On 2024-07-12 05:11 GMT
  • பங்குகளின் விலை 22 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது.
  • ஜியோ ஐபிஓ திட்டம் பற்றிய தகவல்கள் வெளியாகலாம்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிட்டெட் தனியாக பிரிக்கப்பட்டு 2025 ஆம் ஆண்டு ஐபிஓ வெளியியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது ஜியோ நிறுவனத்தின் மதிப்பீடு ரூ. 9.3 லட்சம் கோடிகள் வரை இருக்கும் என்று முன்னணி முதலீட்டு நிறுவனமான ஜெஃப்ரீஸ் தெரிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம் பிட்டியலிடும் போது மதிப்பீட்டை 112 பில்லின் டாலர்கள் வரை நிர்ணயிக்கும் என்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலையை விட 7 முதல் 15 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என்று அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை ரூ. 3,580 வரை இருக்கும் வகையில் ரேட்டிங் இருந்ததாக ஜெஃப்ரிஸ் தெரிவித்துள்ளது. இது முந்தைய பங்குசந்தை நிறைவு நேரத்தில் இருந்த தொகையை விட 13 சதவீதம் வரை குறைவு ஆகும்.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலை 22 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. சிறு பங்குதாரர்களுக்கு ஒட்டுமொத்த ஐபிஓ-வும் விற்பனைக்கு கிடைக்கலாம் என்றும் ஜெஃப்ரிஸ் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ஜியோ ஐபிஓ திட்டம் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News