இந்தியா
கொல்கத்தா போலீஸ் கமிஷனரை மாற்றுங்கள் - மம்தாவுக்கு கவர்னர் உத்தரவு
- பெண் டாக்டர் கொலை தொடர்பாக கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.
- கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலை மாற்ற வேண்டும் என்று கவர்னர் வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் கருத்தரங்கு அறையில் கடந்த மாதம் 9-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் மருத்துவர்கள் வெகுண்டெழுந்த நிலையில் கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில், உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி கிடைவேண்டும் என்ற மக்களின் கோரிக்கை குறித்து அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி நடத்த வேண்டும் என்று முதல்வர் மம்தா பேனர்ஜிக்கு கவர்னர் சிவி ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலை மாற்ற வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.