இந்தியா

ராஜினாமா செய்யுங்கள்: பெண்கள் பாதுகாப்பில் சந்திரபாபு நாயுடு அரசு தோல்வி- ரோஜா

Published On 2024-11-06 06:34 GMT   |   Update On 2024-11-06 06:34 GMT
  • 120 நாட்களில் 110 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன.
  • பெண்கள் பாதுகாப்பில் அரசு தோல்வி அடைந்துவிட்டது.

திருப்பதி:

ஆந்திர மாநில முன்னாள் மந்திரி ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆந்திராவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க உள்துறை மந்திரி அனிதா சரியாக செயல்படவில்லை என பவன் கல்யாண் கூறியதன் காரணம் என்ன?

குற்றவாளிகளை தண்டிப்பதில் யோகி ஆதித்யநாத் போல செயல்படுங்கள் என அவர் கூறியுள்ளார். திருப்பதியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மையை மறைக்க அரசு அழுத்தம் கொடுக்கிறது.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சி செய்கின்றனர்.

மாநிலத்தில் எத்தனையோ கொடுமைகள் நடக்கும் போது சந்திரபாபு நாயுடுவின் மகன் மந்திரி லோகேஷ் வெளிநாட்டில் சுற்றி திரிகிறார்.

கல்லூரிகளில் பெண்கள் தாக்கப்படும் போது கல்வி அமைச்சர் என்ன செய்கிறார். ஆந்திராவில் 120 நாட்களில் 110 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன.

பெண்களுக்கு எதிரான தொடர் வன்முறைகள் நடக்கும் போது சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், மந்திரி அனிதா என்ன செய்கிறார்கள்.

இந்துபுரத்தில் மாமியார் மருமகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் போது அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. நடிகர் பாலகிருஷ்ணா படப்பிடிப்பில் பங்கேற்றார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூட கூறவில்லை. பெண்கள் பாதுகாப்பில் அரசு தோல்வி அடைந்துவிட்டது.

சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார். பெண்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள். ஆந்திராவில் நடக்கும் கொடுமைகளை பார்த்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News