இந்தியா

ஒரு வருடத்தில் மிகக் குறைவு... டிசம்பரில் சில்லறை பணவீக்கம் 5.72 சதவீதமாக குறைந்தது

Published On 2023-01-12 14:03 GMT   |   Update On 2023-01-12 14:03 GMT
  • ரிசர்வ் வங்கி வைத்துள்ள நிர்ணய வரம்புக்குள் சில்லறை பணவீக்கம் கடந்த இரண்டு மாதமாக குறைந்துள்ளது
  • கிராமப்புறங்களில் நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கம் டிசம்பரில் 6.05 சதவீதமாக குறைந்துள்ளது

புதுடெல்லி:

2022 டிசம்பர் மாதத்துக்கான சில்லறை பணவீக்கம் தொடர்பான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி சில்லறை பணவீக்கம், ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதத்தில் 5.72 சதவீதமாக குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை குறைவதே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறை பணவீக்க விகிதமானது அக்டோபர் மாதம் 6.77 சதவீதமாகவும், நவம்பர் மாதம் 5.88 சதவீதமாகவும் இருந்த நிலையில், டிசம்பர் மாதம் மேலும் சரிந்துள்ளது. ரிசர்வ் வங்கி வைத்துள்ள நிர்ணய வரம்பான 6 சதவீதத்துக்குள் சில்லறை பணவீக்கம் கடந்த இரண்டு மாதமாக தொடர்ந்து குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிராமப்புறங்களில் நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கம் நவம்பரில் 6.09 சதவீதமாக ஆக இருந்தது. டிசம்பரில் 6.05 சதவீதமாக குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் சில்லறை பணவீக்கம் 6.05 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 5.39 சதவீதமாகவும் உள்ளது.

Tags:    

Similar News