null
டெல்லி அணியின் அதிரடியான ஆட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது- ரிஷப்பண்ட்
- ஐ.பி.எல் போட்டியில் குஜராத்தை மீண்டும் வீழ்த்தி டெல்லி அணி 4-வது வெற்றியை பெற்றது.
- ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது சிறந்ததை வெளிப்படுத்தவே விரும்புகிறேன்.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது.
கேப்டன் ரிஷப்பண்ட் 43 பந்தில் 88 ரன்னும் (5 பவுண்டரி, 8 சிக்சர்), அக்ஷர் படேல் 43 பந்தில் 66 ரன்னும் (5 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். சந்தீப் வாரியர் 3 விக்கெட்டும் நூர் முகம்மது 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சாய் சுதர்ஷன் 39 பந்தில் 65 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), டேவிட் மில்லர் 23 பந்தில் 55 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.
ரஷிக்சலாம் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், ஆன்ரிச் நோர்க்யா, முகேஷ் குமார், அக்ஷர் படேல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
டெல்லி கேப்பிட்டல்சுக்கு 4-வது வெற்றி கிடைத்தது. அந்த அணி குஜராத்தை மீண்டும் தோற்கடித்தது. அகமதாபாத்தில் கடந்த 17-ந் தேதி நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது.
இந்த வெற்றி குறித்து டெல்லி அணி கேப்டன் ரிஷப்பண்ட் கூறியதாவது:-
நாங்கள் ஒரு கட்டத்தில் 44 ரன்னில் 3 விக்கெட் இழந்தோம். அப்போது நானும், அக்ஷர்படேலும் மதன்மை சுழற்பந்து வீரர் களை அடித்து ஆட வேண்டும் என்று திட்ட மிட்டோம். முதல் சிக்சர் அடித்ததும் தன்னம்பிக்கை அதிகரித்தது. எனது அதிரடியான ஆட்டம் மகிழ்ச்சியை அளித்தது.
20 ஓவர் போட்டி என்பது வேடிக்கையான விளையாட்டாகும். 2-வது பேட்டிங் செய்யும்போது 15 ஓவருக்கு பிறகு பந்து ஆடுவதற்கு ஏற்ற வகையில் நன்றாக அமைந்தது. 19-வது ஓவரை ரஷிக் சலாம் மீது நம்பிக்கை வைத்து கொடுத்தோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது சிறந்ததை வெளிப்படுத்தவே விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மொகித் சர்மா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் ரிஷப்பண்ட் 30 ரன்கள் (2,6,4,6,6,6) குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் அணி 5-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் சுப்மன்கில் கூறும்போது, 'நாங்கள் சிறந்த கிரிக் கெட்டை வெளிப்படுத்தி னோம். இறுதியில் தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. டெல்லி அணியை 200 முதல் 210 ரன் வரை கட்டுப் படுத்தலாம் என்று நினைத்தேன். ஆனால் கடைசி 2 ஓவரில் அதிக ரன்களை கொடுத்து விட்டோம். பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத் தில் பந்து வீச்சாளர்கள் யார்க்கர்களை பயன்படுத்தி இருக்க வேண்டும்' என்றார்.