இந்தியா
null

சாலைகள், விமான நிலையம், ஹெலிபேடுகள்: எல்லையில் சீனா அமைத்ததாக பென்டகன் தகவல்

Published On 2023-10-22 05:14 GMT   |   Update On 2023-10-22 05:44 GMT
  • இந்தோ- சீனா எல்லையில் கட்டமைப்புகளை அதிகரித்து வருகிறது சீனா
  • சாலைகள், ஹெலிபேடுகள் அமைத்துள்ளதாக பென்டகன் தகவல்

இந்தியா- சீனா இடையில் எல்லை கட்டுபாட்டுக் கோடு தொடர்பாக பிரச்சினை தொடர்ந்து இருந்த வண்ணம் உள்ளது. அவ்வப்போது சீனா இந்தியா எல்லைக்குள் ஊடுருவது உண்டு. பின்னர், இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததும் பின்வாங்கிவிடும்.

கடந்த 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் இதுபோன்ற சம்பவத்தின்போது இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அதன்பின் இந்தியா எல்லை அருகே பாதுகாப்பை அதிகரித்துள்ளது. என்றபோதிலும், சீனாவும் கட்டமைப்புகளை அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு சாலைகள் அமைத்தல், இரு பயன்பாட்டுக்கான விமான நிலையம் அமைத்தல், பல்வேறு ஹெலிபேடுகள் அமைத்தல் போன்ற செயல்களில் சீனா ஈடுபட்டு வந்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது.

டோக்லாம், பாங்காங் லேக் போன்ற எல்லைப் பகுதியில் இந்த கட்டமைப்புகளை ஏற்படுத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News