இந்தியா
உ.பி. முன்னாள் மந்திரி அசம்கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை - உ.பி. கோர்ட் உத்தரவு
- சமாஜ்வாதி கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் அசம் கான்.
- கடந்த பொதுத்தேர்தலில் பிரதமர், முதல் மந்திரி ஆகியோரை அவதூறாகப் பேசியிருந்தார்.
லக்னோ:
சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அசம் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு உத்தர பிரதேச ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் மற்றும் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.