இந்தியா
null

மத்திய அரசிடமிருந்து தேர்தல் பத்திரங்களுக்காக ரூ.10.68 கோடி கமிஷன் பெற்ற எஸ்.பி.ஐ. வங்கி

Published On 2024-04-05 10:28 GMT   |   Update On 2024-04-05 10:36 GMT
  • கடந்த பிப்ரவரி மாதம், உச்ச நீதிமன்றத்தால் தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டது.
  • இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்வியின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

2018 முதல் 2024 வரை தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ததற்காக மத்திய அரசிடமிருந்து ரூ.10.68 கோடி பாரத ஸ்டேட் வங்கி (SBI) கமிஷன் பெற்றுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்வியின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கும் நிதி அமைச்சகத்துக்கும் இடையேயான கடிதப் பரிமாற்றத்தில், வங்கி தனக்கு செலுத்த வேண்டிய "கமிஷன்" கோரிக்கையை வைத்தது. மேலும், தேர்தலை முன்னிட்டு பத்திரங்கள் விற்பனை அதிகரிக்கும் என்றும் எஸ்.பி.ஐ குறிப்பிட்டுள்ளது. அத்துடன், வங்கி தனது பரிவர்த்தனை கட்டணம் மற்றும் வங்கிக் கட்டணங்களுக்கு 18% ஜி.எஸ்.டி-யுடன் "கமிஷன்" செலுத்துவதற்கான வவுச்சர்களை உயர்த்தியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம், உச்ச நீதிமன்றத்தால் தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News