உத்தரகாண்டில் பயங்கர நிலச்சரிவு: நெடுஞ்சாலைகள் மூடல்
- பத்ரிநாத் நெடுஞ்சாலை அமைந்துள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
- இதனால் பத்ரிநாத் செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
டேராடூன்:
வட மாநிலங்களில் தொடர் கனமழை மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் தவித்து வருகின்றனர். மழை மற்றும் வெள்ளத்திற்கு மேலும் பலர் பலியாகி 75க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கிக் கிடப்பதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் செல்லும் பாதை உள்பட பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
ஜோஷிமத் நகரத்திற்கு 1 கிலோ மீட்டர் முன் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்மூலம் பத்ரிநாத் செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இது சுமார் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இமயமலைக்குச் செல்லும் ஒரே சாலையாகும்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் குறித்த நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நாளை காலைக்குள் நெடுஞ்சாலைகள் மீண்டும் திறக்கப்படும். சாலைகளைச் சுத்தம் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என தெரிவித்தனர்.
More visuals of Badrinath Highway. pic.twitter.com/VwnNihkRZz
— Mohammed Zubair (@zoo_bear) July 10, 2024