தெலுங்கானாவில் சிக்கித் தவித்த ரெயில் பயணிகள் 10 ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு செல்ல மாற்று ஏற்பாடு
- 4,200 பயணிகளை ஏற்றிச் செல்ல 84 அரசு பஸ்கள் அந்த இடத்தில் ஏற்பாடு செய்தனர்.
- பயணிகளுக்காக சென்னை நோக்கி மேலும் 2 சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
தெலுங்கானாவில் மழை வெள்ளம் காரணமாக செகந்திராபாத்-விசாகப்பட்டினம் கோதாவரி எக்ஸ்பிரஸ்; புதுடெல்லி-சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மற்றும் ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் விரைவு ரெயில்கள் கொண்டப்பள்ளி மற்றும் ராயனப்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டன.
ரெயில் பயணிகளை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விஜயவாடா ரெயில் நிலையத்திற்கு 4,200 பயணிகளை ஏற்றிச் செல்ல 84 அரசு பஸ்கள் அந்த இடத்தில் ஏற்பாடு செய்தனர்.
கோதாவரி எக்ஸ்பிரஸ் பயணிகளுக்காக விஜயவாடா ரெயில் நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மற்றும் சார்மினார் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்காக சென்னை நோக்கி மேலும் 2 சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
ஒரே நேரத்தில், பெங்களூருவில் சிக்கித் தவிக்கும் பயணிகளை டானாபூருக்கும், தானாபூரில் இருந்து பெங்களூரு சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கும் கொண்டு செல்ல 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
நெக்கொண்டாவில் இருந்து மொத்தம் 74 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சுமார் 5,600 பயணிகள் காசிப்பேட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்.
காசிப்பேட்டையில் இருந்து டானாபூருக்கு ஒரு சிறப்பு ரெயிலும், காசிபேட்டையில் இருந்து பெங்களூருக்கு மற்றொரு சிறப்பு ரெயிலும் இயக்கப்பட்டன. 10,000 பயணிகள் பாதுகாப்பாக அவர்களது செல்லும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.