இந்தியா

இறக்குமதி பொருள்: ஷைனா என்.சி.யிடம் மன்னிப்பு கேட்ட உத்தவ் சிவசேனா எம்.பி

Published On 2024-11-02 10:55 GMT   |   Update On 2024-11-02 10:55 GMT
  • மும்பாதேவி தொகுதியில் ஷைனா என்.சி போட்டியிட ஏக்நாத் ஷிண்டே வாய்ப்பு வழங்கினார்.
  • ஷைனா எம்.சி. ஒரு இறக்குமதி பொருள் என உத்தவ் கட்சி எம்.பி. கருத்து தெரிவித்தார்.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 23-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்தவர் பெண் தலைவர் ஷைனா என்.சி. இவர் வேட்புமனு தாக்கலுக்கு ஒரு நாள் முன்னதாக பா.ஜ.க. கூட்டணியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கட்சியில் இணைந்தார். உடனே அவருக்கு மும்பாதேவி தொகுதியில் போட்டியிட ஏக்நாத் ஷிண்டே வாய்ப்பு வழங்கினார்.

இதற்கிடையே, உத்தவ் தாக்கரே கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அரவிந்த் சாவந்த், ஷைனா எம்.சி. ஒரு இறக்குமதி பொருள் (imported maal). மும்பாதேவி தொகுதிக்கு தொடர்பில்லாத வெளிப்பகுதியில் இருந்து வந்தவர் என விமர்சித்திருந்தார். இதற்கு மகாயுதி கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், உத்தவ் சிவசேனா எம்.பி அரவிந்த் சவந்த் தனது பேச்சுக்காக இன்று மன்னிப்பு கோரினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் சாவந்த், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. இருந்தும் ஒரு பெண்ணை அவமதித்து விட்டேன். என் வாழ்நாளில் இப்படிச் செய்ததில்லை. நான் ஆபாச அர்த்தத்தில் பேசவில்லை. எனினும், நான் அந்த அர்த்தத்தில் பேசியதாக பலரும் என்னை குறிவைக்கிறார்கள். எனது பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News