இந்தியா

பாகிஸ்தானுடனான போட்டியை ரத்துசெய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு சிவசேனா கடிதம்

Published On 2024-06-13 11:37 GMT   |   Update On 2024-06-13 11:37 GMT
  • ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா சென்ற பக்தர்கள்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
  • பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மும்பை:

பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா சென்ற பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இரு தினங்களுக்கு முன் கதுவா மற்றும் தோடா மாவட்டங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒரு சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார். 6 வீரர்கள் காயமடைந்தனர்.

பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக, டி 20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் பாகிஸ்தானுடன் ஆட நேர்ந்தால் இந்தியா அந்தப் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து உள்துறை மந்திரி அமித்ஷா, விளையாட்டுத்துறை மற்றும் பிசிசிஐ ஆகியோருக்கும் இதன் நகலை இணைத்துள்ளார்.

Tags:    

Similar News