இந்தியா

6 ஆண்டாக செருப்பு அணியாத தொண்டருக்கு ஷூ தந்த முன்னாள் முதல் மந்திரி: காரணம் இதுதான்

Published On 2023-12-23 14:38 IST   |   Update On 2023-12-23 15:26:00 IST
  • மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.
  • கடந்த முறை நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.

போபால்:

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆணி வேராக இருப்பது தொண்டர்களே. தங்கள் தலைவர்களுக்காக தயக்கம் இன்றி களத்தில் இறங்கி செயலாற்றுவது வழக்கம். தங்களின் தலைவர்கள் வெற்றிபெற வேண்டி தொண்டர்கள் பல வினோதமான செயல்களை செய்வார்கள்.

பா.ஜ.க.வைச் சேர்ந்த ராம்தாஸ் புரி என்பவர், கடந்த 6 ஆண்டாக செருப்பு அணியாமல் நடப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியில் அமரும் வரை கால்களில் செருப்பு மற்றும் ஷூ அணிய மாட்டேன். கடந்த 2018-ல் நான் எனது செருப்புகளை கழற்றிய நான், கடந்த 6 ஆண்டாக செருப்பு அணியாமல் இருந்துவருகிறேன். மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்தால் தான் மீண்டும் அதனை அணிந்துகொள்வேன் என தெரிவித்தார்.

இதற்கிடையே, சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியான சிவராஜ் சிங் சவுகான் இன்று ம.பி.யின் அனுப்பூர் பகுதிக்குச் சென்றார். அங்கு மாவட்ட தலைவராக இருக்கும் ராம்தாஸ் புரியைச் சந்தித்து புதிய ஷூக்களைக் கொடுத்தார்.

பா.ஜ.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, ராம்தாஸ் புரி அந்த ஷூக்களை மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டார்.

கடந்த முறை நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News