- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- ஒரு விலங்கு ஏன் நரமாமிசத்தை தேடுகிறது? என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார்.
வன விலங்குகள் வேட்டை தொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அவற்றில் சில வீடியோக்கள் ரசனையாகவும், சில வீடியோக்கள் அதிர்ச்சியாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் முதலை வேட்டை தொடர்பான வீடியோ இணைய பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ஒரு ஓடையில் பெரிய முதலை மெதுவாக தண்ணீரில் மிதந்து செல்கிறது. அப்போது அங்கு ஒரு சிறிய முதலை செல்வதையும், திடீரென பெரிய முதலை அந்த குட்டி முதலையை பிடித்து உண்ணும் காட்சிகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இணையத்தில் வைரலாகி 35 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு விலங்கு ஏன் நரமாமிசத்தை தேடுகிறது? என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார். மற்றொரு பயனர், இதை பார்க்கும் போது பயமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். இதுபோன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.