இந்தியா

வேட்டி கட்டி வந்த முதியவருக்கு ஷாப்பிங் மாலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு - வீடியோ வைரல்

Published On 2024-07-17 12:56 GMT   |   Update On 2024-07-17 12:57 GMT
  • வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார்.
  • இது கலாச்சார தீண்டாமை என்ற கருத்துக்களும் முன்வைக்கப்டுகின்றன.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வேட்டி கட்டிக்கொண்டு வந்ததால் முதியவர் ஒருவர் ஷாப்பிங் மாலில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள GT மாலில் நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி கண்டனங்களை குவித்து வருகிறது.

வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார். மாலுக்குள் நுழையும் போது வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை,பேன்ட் மாற்றிக்கொண்டு வந்தால் அனுமாகிக்கிறோம் என மால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

முதியவரிடம் ப்ரீ புக்கிங் செய்யப்பட்ட பட டிக்கெட் இருந்தும், வேட்டியை அனுமதிக்கக்கூடாது என்பது தங்களது மாலின் கொள்கைகளில் ஒன்று என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டியையே உள்ளே அனுமதிக்காத மால் நிர்வாகத்தை கிழித்தெடுத்து வருகின்றனர். மேலும் இது கலாச்சார தீண்டாமை என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. இதற்கிடையில் இந்த வீடியோ சர்ச்சையான நிலையில் மால் நிர்வாகம் முதியவருக்கு சால்வை அணிவித்து சமாதானப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News