இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள்-டிரோன்கள்
- தோண்ட தோண்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்படுகிறது.
- வீடுகள் இருந்த பகுதி தடம் தெரியாமல் மாறி விட்டது.
திருவனந்தபுரம்:
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி இருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தோண்ட தோண்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்படுகிறது.
கடும் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் வீடுகள் இருந்த பகுதி தடம் தெரியாமல் மாறி விட்டது. எங்கு பார்த்தாலும் பெரிய பாறைகள், மரங்கள் என மலை போன்று குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை அகற்றி பலியானவர்களின் உடல்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.
கடும் சவால்களுக்கு மத்தியில் ராணுவ வீரர்களும், பேரிடர் மீட்புப்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபடுகின்றனர்.
நிலச்சரிவில் முழுமையாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நடந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள பாறைகள் மற்றும் இடிந்து கிடக்கும் கட்டிடங்களை அகற்றுவதற்காக ஜே.சி.பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. அவை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்ல ராணுவ வீரர்கள் பாலம் அமைத்தனர்.
அதன் வழியாக ஜே.சி.பி. எந்திரங்கள் வீடுகள் புதைந் திருக்கும் பகுதிக்கு சென்றன. வீடுகள் இருந்த பகுதிகளை அவை தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அப்போதும் பலரது உடல் மீட்கப்படுகிறது. 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியான நிலையில் நூற்றுக்கும் அதிக மானவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
அவர்களை கண்டுபிடிக்க மீட்புப்படையினர் இன்று டிரோன்களை பயன்படுத்தினர். டிரோன்களை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் மற்றும் ஆற்றுப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பறக்கச் செய்து மாயமான யாரேனும் இருக்கிறார்களா? என்று பார்த்தனர்.
நிலச்சரிவில் மாயமானவர்களை கண்டுபிடிக்க மனித ரத்தத்தில் பயிற்சி பெற்ற போலீஸ் மோப்ப நாயும் பயன்படுத்தப்படுகின்றன. அவை நிலச்சரிவு ஏற்பட்டு புதைந்து கிடக்கும் கட்டிடங்களுக்குள் சென்று ஆட்களை கண்டுபிடித்து வருகின்றன.
இடிபாடு களுக்குள் அடியில் கிடக்கும் மனித உடல்களை கண்டறி யவதில் நிபுணத்துவம் பெற்ற அந்த மோப்ப நாய்கள் நேற்று வரை 10-க்கும் மேற்பட்ட உடல்களை கண்டுபிடித்துள்ளன.