இந்தியா
null

33- வது நினைவு நாள்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, தலைவர்கள் அஞ்சலி

Published On 2024-05-21 06:18 GMT   |   Update On 2024-05-21 07:57 GMT
  • நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே ராஜீவ்காந்தி உருவ படம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
  • ராஜீவ் காந்தி நினைவு தினமான மே 21- ந்தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

புதுடெல்லி:

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33- வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி எம்.பி, ராகுல் காந்தி எம்.பி, ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ப.சிதம்பரம், சச்சின் பைலட், கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவும் பங்கேற்றார்.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே ராஜீவ்காந்தி உருவ படம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.


ராஜீவ் காந்தி நினைவு தினமான மே 21- ந்தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதமர் மோடி எக்ஸ் வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் நமது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளில் அவருக்கு எனது அஞ்சலிகள் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News