ED சம்மனை பார்த்துக் கொள்ளலாம்...! ஜனாதிபதி விருந்தில் கலந்த கொள்ள டெல்லி பறக்கிறார் ஹேமந்த் சோரன்
- இரண்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை
- தற்போது 3-வது முறையாக இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் உள்ளார். இவருக்கு அமலாக்கத்துறை நில அபகரிப்புடன் தொடர்புடைய பண மோசடி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி 3-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
ராஞ்சியில் உள்ள அலுவலகத்தில் கடந்த மாதம் 14-ந்தேதி மற்றும் 24-ந்தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தது. இரண்டு முறையும் அவர் ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து 3-வது முறையாக இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதற்கிடையே, ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் கலந்த கொள்ளும்படி, ஹேமந்த் சோரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு ஏற்று இன்று இரவு நடைபெறும் விருந்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இதனால் 3-வது முறையாகவும் இன்றும் ஆஜராகமாட்டார் எனத் தெரிகிறது.
முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஹேமந்த் சோரன், ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் ஜி20 மாநாட்டை முன்னிட்டு அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள டெல்லி புறப்படுவார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சுரங்க குற்றச்சாட்டில் கடந்த வரும் நவம்பர் 18-ந்தேதி, அமலாக்கத்துறை, சுமார் 9 மணி நேரம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.