இந்தியா

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 19-ந்தேதியில் இருந்து புதிய கட்டிடத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடர்

Published On 2023-09-06 08:11 GMT   |   Update On 2023-09-06 08:11 GMT
  • புதிய கட்டிடம் திறந்த பிறகு மழைக்கால கூட்டத்தொடர் பழைய கட்டிடத்தில் நடைபெற்றது
  • வருகிற 19-ந்தேதியில் இருந்து சிறப்பு கூட்டம் புதிய கட்டிடத்தில் நடைபெற இருக்கிறது

இந்திய பாராளுமன்ற கட்டிடம் சில மாதங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்டது. கடந்த மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத் தொடர் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பழைய கட்டிடத்தில்தான் நடைபெற்றது.

தற்போது வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை ஐந்து நாட்கள் சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறும் என இந்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். ஆனால், என்ன நோக்கத்திற்காக கூட்டம் நடைபெற இருக்கிறது என்பது குறித்து மத்திய அரசு தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் சிறப்புக் கூட்டம் எங்கு நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் 18-ந்தேதி வழக்கும்போல் பழைய கட்டிடத்தில் கூட்டம் தொடங்கும். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 19-ந்தேதி புதிய பாராளுமன்றத்திற்கு கூட்டம் மாற்றப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா 18-ந்தேதி மதியம் 12.39 மணி முதல் 19-ந்தேதி இரவு 8.43 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது.

Tags:    

Similar News