இந்தியா (National)

1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த பங்குச்சந்தை சென்செக்ஸ்.. அடிவாங்கிய நிஃப்டி

Published On 2024-09-30 07:09 GMT   |   Update On 2024-09-30 07:09 GMT
  • வாரத்தின் முதல் நாளான இன்று [செப்டம்பர் 30] மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,020 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.
  • இன்றைய சென்செக்ஸ் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த வாரத்தில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட பங்குச்சந்தை இந்த வார தொடக்கத்திலேயே கடும் சரிவை சந்தித்துள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று [செப்டம்பர் 30] மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,020 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.

மேலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 26,000 புள்ளிகளுக்குக் கீழே சரிந்தது. இதனால் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்,ஆக்சிஸ், ஐசிஐசி, எச்டிஎஃப்சி, ஆக்சிஸ் உள்ளிட்ட வங்கிகள் மற்றும் ஐடி பங்குகள் கடும் இழப்பை சந்தித்தன.

அதேவேளையில் ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், HCL டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளது. மொத்தமாக இன்றைய சென்செக்ஸ் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Tags:    

Similar News