இந்தியா
ம.பி.யில் கன்வர் யாத்திரை பக்தர்கள் மீது கல்வீச்சு: வாகனங்கள் உடைப்பு-போலீஸ் தடியடி
- லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பாடல்களை முழங்கியபடி கங்கை நதியில் புனித நீர் சேகரிக்க நடந்து சென்று வருகின்றனர்.
- போலீசார் கல்வீசிய கும்பல் மீது தடியடி நடத்தினார்கள்.
போபால்:
வடமாநிலங்களில் சிவ பக்தர்கள் கன்வர் யாத்திரை மேற்கொண்டு உள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பாடல்களை முழங்கியபடி கங்கை நதியில் புனித நீர் சேகரிக்க நடந்து சென்று வருகின்றனர்.
மத்தியபிரதேச மாநிலம் கந்த்வா பகுதியில் உள்ள கோவிலுக்கு நேற்று இரவு கன்வர் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது சிலர் திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். மேலும் மோட்டார் சைக்கிள் மற்றும் தாசில்தார் வாகனத்தையும் அவர்கள் அடித்து நொறுக்கினார்கள். இதனால் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் கல்வீசிய கும்பல் மீது தடியடி நடத்தினார்கள். இந்த கல்வீச்சில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. சம்பவ இடத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.