இந்தியா

துருக்கி, சிரியா நிலநடுக்கம் - பலியானோருக்கு மணல் சிற்பத்தால் அஞ்சலி செலுத்திய சுதர்சன் பட்நாயக்

Published On 2023-02-10 21:15 GMT   |   Update On 2023-02-10 21:15 GMT
  • துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் சிக்கி 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.
  • அங்கு மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

புவனேஸ்வர்:

துருக்கி, சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது.

நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அங்கு மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன. நேற்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணல் சிற்பம் உருவாக்கியுள்ளார்.

Tags:    

Similar News