மேக்-அப் மூலம் பாடகியை ஈர்த்த 4 வயது சிறுமி- வீடியோ
- சிறுமி தனது கண் புருவங்களை உயர்த்துவதையும், மேக்-அப் முடிந்ததும் அழகாக சிரிக்கும் காட்சிகளும் பயனர்களிடம் பாராட்டை பெற்றது.
- வீடியோ சுமார் 1 கோடியே 20 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.
கேரளாவை சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது ஐ-லைனர் திறன்களை வெளிப்படுத்தும் மேக்-அப் வீடியோ மூலம் இணையத்தில் பிரபலமானார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், சிறுமி மேக்-அப் செய்யும் காட்சிகள் பயனர்களை மிகவும் கவர்ந்திருந்தது. அந்த சிறுமி தனது கண் புருவங்களை உயர்த்துவதையும், மேக்-அப் முடிந்ததும் அழகாக சிரிக்கும் காட்சிகளும் பயனர்களிடம் பாராட்டை பெற்றது.
இந்த வீடியோ வைரலான நிலையில், டெல்லியை சேர்ந்த பிரபல பாடகி சுனிதா சவுகான் அதே போன்ற ஒரு வீடியோவை மீண்டும் உருவாக்க ஆசைப்பட்டார். அதன்படி, சிறுமி முதலில் தனது கண்ணின் ஒருபுறம் ஐ-லைனர் செய்வது போன்று பாடகியும் செய்கிறார். தொடர்ந்து சிறுமியை போலவே ஐ-லைனர் மூலம் சுனிதா சவுகான் மேக்-அப் செய்த காட்சிகளை பார்த்து பயனர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த வீடியோவுடன் சுனிதா சவுகானின் பதிவில், அவள் ஒப்புதல் அளிப்பாள் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலான நிலையில், நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ், நடிகர் மெய்யாங் சாங், பாடகி ஜாஸ்மின் சான்டலஸ் உள்ளிட்ட பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர். இந்த வீடியோ சுமார் 1 கோடியே 20 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.