பிரபல நிறுவனங்களின் போலி தயாரிப்புகள்.. 4 பேரை கைது செய்த போலீஸ்
- போலி ஈனோ மற்றும் தூபக்குச்சிகளை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.
- வினியோக தொடர்பு மற்றும் போலி தயாரிப்பு பொருட்களின் விற்பனை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் நவி பார்டி கிராமத்தில் உள்ள தேசிய தொழிற்பேட்டையில் உள்ள குடோன் மற்றும் கலுடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர்.
குடோனில் போலீசார் நடத்திய சோதனையில், ஈனோ பிராண்டை பிரதிபலிக்கும் இயந்திரங்கள் மற்றும் பேக்கேஜிங் பொருட்களை பயன்படுத்தி போலி ஈனோ சோடாவை அவர்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தது சோதனையில் தெரியவந்தது.
குடோனில் ஈனோ பிராண்ட் சோடாவை பேக் செய்யும்போது இரண்டு பேர் கையும் களவுமாக பிடிபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து பினால் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்திய போலீசார், போலி ஈனோ சோடா, மங்கல் தீப் தூபக்குச்சிகள் மற்றும் வீட் முடி அகற்றும் கிரீம்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகன இருவரை போலீசார் கைது செய்தனர்.
போலி ஈனோ மற்றும் தூபக்குச்சிகளை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர். மேலும் 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த 15-20 நாட்களாக போலி தயாரிப்புகள் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவன அதிகாரியின் புகாரின் அடிப்படையில், வினியோக தொடர்பு மற்றும் போலி தயாரிப்பு பொருட்களின் விற்பனை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.