கடும் பனிமூட்டம் எதிரொலி: டெல்லியில் 100 விமானங்கள் தாமதம்- 2 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன
- டெல்லியில் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், 4 நாட்கள் அடர் பனி மூட்டம் நீடிக்கும்.
- டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சுமார் 100 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஆனது.
டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனி மூட்டம் நிலவுகிறது.
டெல்லியில் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், 4 நாட்கள் அடர் பனி மூட்டம் நீடிக்கும் என இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடர் பனி மூட்டத்தால் ரெயில், விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பனிப்பொழிவு காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சுமார் 100 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஆனது.
மேலும் இரவு 11.45 மணிக்கு ஒரு ஸ்பைஸ் ஜெட் விமானம் மற்றும் அதிகாலை 2.15 மணிக்கு ஒரு இண்டிகோ விமானம் ஆகிய 2 விமானங்கள் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டன. இந்த சீசனில் மூடு பனி காரணமாக விமானங்கள் திருப்பிவிடப்படுவது இது முதல் முறையாகும்.
இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், விமானங்கள் திட்டமிடப்பட்ட நேரத்தில் வருவது அல்லது புறப்படும் நேரத்தில் இருந்து 15 நிமிடங்களுக்கு மேல் மாற்றம் ஏற்பட்டால் அது தாமதம் என வகைப்படுத்தப்படும் என்றார்.