மதுரா கோவிலில் நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் மூச்சு திணறி பலி
- கிருஷ்ணன் பிறந்த இடமாக கருதப்படும் மதுரா வீடு-பான்கே பிகாரி என்ற கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நள்ளிரவு விசேஷ பூஜை நடந்தது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
- கோவில் நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தனர்.
மதுரா:
கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணன் கோவிலில் விசேஷ பூஜைகள் நடந்தது.
கிருஷ்ணன் பிறந்த இடமாக கருதப்படும் மதுரா வீடு-பான்கே பிகாரி என்ற கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நள்ளிரவு விசேஷ பூஜை நடந்தது.
இதில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
கோவில் நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தனர்.
அப்போது கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி சில பக்தர்கள் தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது கூட்டத்துக்குள் மாட்டிக்கொண்ட ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர்.
6 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.