இந்தியா

கேரளாவுக்கு 3-வது வந்தே பாரத் ரெயில்... 31-ந்தேதி முதல் இயக்கம்

Published On 2024-07-27 05:37 GMT   |   Update On 2024-07-27 05:37 GMT
  • பெங்களூருவில் இருந்து மறுநாள் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.20 மணிக்கு எர்ணாகுளத்திற்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வந்தே பாரத் ரெயில் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் பெங்களூரு ஆகிய ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும்.

திருவனந்தபுரம்:

ரெயில் பயணிகளின் பயண நேரத்தை குறைக்கவும், சொகுசான பயணத்தை கொடுக்கும் வகையிலும் நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. கேரள மாநிலத்தில் 2 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது 3-வது வந்தே பாரத் ரெயில் சேவை வருகிற 31-ந்தேதி தொடங்கப்பட இருக்கிறது.

இந்த ரெயில் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரெயிலாக வாரத்தில் புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இயக்கப்பட உள்ளது. மதியம் 12.50 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் அந்த ரெயில், இரவு 10 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றடையும்.

அதேபோல் மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து மறுநாள் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.20 மணிக்கு எர்ணாகுளத்திற்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வந்தே பாரத் ரெயில் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் பெங்களூரு ஆகிய ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News