சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 61 ஆண்டுகள் சிறை தண்டனை
- ஒப்பந்ததாரராக இருந்து பணிபுரிந்த ராஜீவ், சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
- சிறை தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி, ராஜீவ்வுக்கு ரூ.2.10 லட்சம் அபராதமும் விதித்தார்.
திருவனந்தபுரம்:
மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் (வயது 28). இவர், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். சிறுமியின் வீட்டில் கட்டுமான பணி நடந்தபோது, அங்கு ஒப்பந்ததாரராக இருந்து பணிபுரிந்த ராஜீவ், சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.
அதில், குற்றம் சாட்டப்பட்ட ஒப்பந்ததாரர் ராஜீவ்வுக்கு 16 வயதிற்குட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுக்கு 25 ஆண்டுகள், குழந்தை மீது கடுமையான பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு 25 ஆண்டுகள், ஒரு குழந்தையை மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுக்கு 6 ஆண்டுகள், குழந்தையுடன் வெளிப்படையான பாலுறவு மற்றும் உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு 3 ஆண்டுகள், கொலை மிரட்டல் குற்றச்சாட்டுக்கு 2 ஆண்டுகள் என மொத்தம் 61 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
சிறை தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி, ராஜீவ்வுக்கு ரூ.2.10 லட்சம் அபராதமும் விதித்தார்.