அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் நிபந்தனை தளர்வு
- ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் எந்த இடங்களுக்கும் செல்லலாம்.
- ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது விசாரணை அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
புதுடெல்லி:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார்.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி தனக்கு ஜாமீன் நிபந்தனையில் தளர்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு அவரது ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி உள்ளது.
ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் எந்த இடங்களுக்கும் செல்லலாம். அவர் விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது விசாரணை அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர் பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
அதே நேரத்தில் வெளிமாநிலங்களுக்கு செல்ல ராஜேந்திர பாலாஜி அனுமதி கேட்டதற்கு சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.