அக்னிபத் திட்டத்திற்கு தொடரும் எதிர்ப்பு- பீகாரில் மேலும் ஒரு ரெயில் எரிப்பு
- ரெயில் நிலைய உடைமைகளையும் சேதப்படுத்தியது.
- பீகார் மாநிலம் சாப்ராவில் ரெயில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் போராட்டம் தொடருகிறது.
புதிய ராணுவ ஆள்சேர்ப்பு கொள்கையான அக்னிபத் திட்டம் மீதான போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது. இந்நிலையில், உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் இன்று காலை ஒரு கும்பல் ரயில்களுக்கு தீ வைத்தது.
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டம் பாஜக ஆளும் அரியானா மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் போராட்டம் பரவியுள்ளது.
பீகார் மாநிலத்தில் போராட்டக்காரர்கள் ரெயிலை தீவைத்து எரித்துள்ளனர். லக்கிசராய் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். நேற்று பீகார் மாநிலம் சாப்ராவில் ரெயில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் போராட்டம் தொடருகிறது.
இதேபோல், உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் இன்று காலை ஒரு கும்பல் ரெயிலுக்கு தீ வைத்தது. மேலும், ரெயில் நிலைய உடைமைகளையும் சேதப்படுத்தியது.
கிழக்கு உ.பி. மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்திற்கு வெளியே தெருக்களில் தடிகளை ஏந்திய மற்றொரு போராட்டக்காரர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், ரயில் நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் பெஞ்சுகளை இளைஞர்கள் லத்திகளைக் கொண்டு உடைக்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது.