இந்தியா
null

செல்போன் பயன்பாட்டால் விந்தணு பாதிப்பு- எய்ம்ஸ் டாக்டர்கள் எச்சரிக்கை

Published On 2024-04-17 05:17 GMT   |   Update On 2024-04-17 05:53 GMT
  • ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையுடன் செல்போனை அதிகமாக பயன்படுத்தினாலும் உடல் நலத்தை பாதிக்கிறது.
  • புகைப்பிடித்தல், மது அருந்துவது அதிகப்படியான செல்போன் பயன்பாடு பதப்படுத்தப்பட்ட உணவுகள் மூலம் உடல் பருமன் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும்.

புகை பிடிப்பதால் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும் என எய்ம்ஸ் டாக்டர்கள் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரி உடற்கூறியல் துறையின் பேராசிரியர் டாக்டர் ரீமா தாதா கூறியதாவது:-

புகை பிடிப்பது மது அருந்துதல் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது போன்றவை இப்போது அதிகரித்து வருகிறது.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையுடன் செல்போனை அதிகமாக பயன்படுத்தினாலும் உடல் நலத்தை பாதிக்கிறது.

அதிகளவு புகைப்பிடித்தல் மற்றும் அதிகளவு செல்போன் பயன்படுத்துவதால் ஆண்களுக்கு விந்தணுவில் டி.என்.ஏ. பாதிக்கப்படும்.

இதனால் இந்த பழக்கங்கள் கொண்ட ஆண்களுக்கு குழந்தைகள் குறைபாடுடன் பிறக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் மலட்டுத்தன்மை ஏற்படும் இந்த பழக்கங்கள் கொண்ட ஆண்களால் அவர்களுடைய மனைவிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு கருச்சிதைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

புகைப்பிடித்தல், மது அருந்துவது அதிகப்படியான செல்போன் பயன்பாடு பதப்படுத்தப்பட்ட உணவுகள் மூலம் உடல் பருமன் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் புற்றுநோய்கள் மன இறுக்கம் உள்ளிட்ட பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News