இந்தியா

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் 175 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி- சர்மிளா

Published On 2024-01-22 05:57 GMT   |   Update On 2024-01-22 05:57 GMT
  • மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூரிடம் விண்ணப்பங்களை வழங்கலாம்.
  • பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளனர்.

திருப்பதி:

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகளும் தற்போதைய முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அவருக்கு அந்த மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. நேற்று அவர் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

நான் மதச்சார்பற்ற கண்ணோட்டத்தின் தீவிர ஆதரவாளர். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.


வருகிற 24-ந் தேதி முதல் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.

அவர்கள் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூரிடம் விண்ணப்பங்களை வழங்கலாம்.

நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்க உள்ளேன்.

இந்த சந்திப்பு வருகிற 31-ந் தேதி வரை தொடரும் ஒவ்வொரு நாளும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.

இதில் பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News