இந்தியா
மேகாலயாவில் முதல்வராக பதவியேற்றார் கான்ராட் சங்மா- துணை முதல்வரும் பதவியேற்பு
- தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த பிரஸ்டோன் டின்சாங் மற்றும் ஸ்னியாவ்பலாங் தார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
- பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.
மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) தலைவர் கான்ராட் சங்மா இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆளுநர் பாகு சௌஹானால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இவரை தொடர்ந்து, தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த பிரஸ்டோன் டின்சாங் மற்றும் ஸ்னியாவ்பலாங் தார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
மேலும், தேசிய மக்கள் கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்கள், பாஜகவை சேர்ந்த 3 எம்ஏஎல்ஏக்களும், ஹெச்எஸ்பிடிபியை சேர்ந்த ஒருவரும் சங்மாவின் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் அசாம் முதல்வரும், என்இடிஏ ஒருங்கிணைப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.