இந்தியா
- நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.
- அசாம் மாநிலத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
அசாம் மாநிலத்தின் மேற்கு கர்பி அங்லாங்கில் இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் தீவிரம் குறைவாக இருந்ததால் இதுவரை எங்கும் சேதம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். மக்கள் நீண்ட நேரம் பீதியில் இருந்தனர்.
இரவு முழுவதும் மக்கள் தூங்காமல் விழித்து இருந்தனர். அசாம் மாநிலத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அசாம் மட்டுமல்லாமல் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் அடுக்கடி நிலநடுக்கம் உணரப்பட்டு வருகின்றன. இந்த நிலநடுக்கங்கள் குறைந்த அளவில் பதிவாவதால் உயிர்சேதம் மற்றும் இதர பாதிப்புகள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.