இந்தியா

அரியானா சட்டசபை தேர்தல்- அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க.

Published On 2024-10-08 03:20 GMT   |   Update On 2024-10-08 07:31 GMT
  • 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
  • தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

பாரதிய ஜனதா ஆளும் அரியானாவில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா, அங்கே ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கியது. அதேநேரம் 10 ஆண்டுகளாக அதிகாரத்தை இழந்திருந்த காங்கிரசோ, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வேகத்தில் களப்பணி ஆற்றியது.

இந்த இரு கட்சிகளை தவிர ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக்தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி, ஜே.ஜே.பி-ஆசாத் சமாஜ் கூட்டணி என பலமுனை போட்டி காணப்பட்டது. எனினும் பெரும்பாலான இடங்களில் பாரதிய ஜனதா-காங்கிரஸ் இடையேதான் நேரடி போட்டி இருந்தது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியத்தில் இருந்து காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்த நிலையில் காலை 10மணியில் இருந்தது பாரதிய ஜனதா முன்னிலை வகித்து வருகிறது.

காங்கிரஸ் 35 தொகுதிகளிலும், பாஜக 49 தொகுதிகளிலும் மற்றவை 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. 

Tags:    

Similar News